Powered By Blogger

Tuesday, January 18, 2011

wrapper of my book about history of Indian cricket

Friday, January 7, 2011

தாதாவுக்கு அவமானம்

இந்திய கிரிக்கெட் அணியை நம்பர் ஒன் ஆக்கியதில் சவுரவ் கங்குலிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.போராடவேண்டும் என்ற வெறியை இந்திய வீரர்களின் மனதில் ஊட்டிவளர்த்தவர் சவுரவ்
                     அப்படிப்பட்டவர் இன்று ஏலத்துக்கு கொஉவந்து யாரும் வாங்காமல் அவமானப்படுத்தியது பெரும் அவமானம்.பேசாமல் அவரும் கும்ப்ளேவைப் போல் நான் ஏலத்துக்கு வரவில்லை என்று அறிவித்திருக்கலாம். 
                    எல்லாம் சரி தாதாவை தங்கள் மண்ணின் மைந்தனாகப் பார்க்கும் கொல்கட்டாவாசிகள் இதை எப்படி ஏற்பார்கள்?ஷாருக்கானால் அங்கே கால் வைக்க முடியுமா .பொறுத்திருந்து பார்ப்போம்

விடைபெறுங்கள் டிராவிட்

  சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் டிராவிட்டுக்கு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது
                        பேட்டிங் வரிசையில் இந்தியாவின் பெரும்சுவர்,வெளிநாட்டுப் போட்டிகளில் எல்லாம் இந்தியாவுக்கு சரிவு ஏற்படும்போது தாங்கிப் பிடித்தவர், கேப்டனாக யார் இருந்தாலும் கோஷ்டி மனப்பான்மை பாராமல் தோள் கொடுத்தவர் எல்லாவற்றுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களைப் பிடித்தவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. ஆனாலும் எனக்கு என்னவோ இப்போது டிராவிட் வெளியேறாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியமே அவரை டெஸ்ட் போட்டியில் இருந்தும் நீக்கி அசிங்கப் படுத்தி விடுமோ என்று தோன்றுகிறது.
    கவாஸ்கர், கபில்தேவ்,அசாருதீன்,கங்குலி என்று இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாய் வலம் வந்த பலருக்கு கடைசிக் காலம் நன்றாக இருந்ததில்லை. இதற்க்குக் காரணம் தங்கள் பார்மை இழந்த பிறகும் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர நினைத்ததுதான். புதிய திறமையான வீரர்கள் பலர் வந்த நிலையில் மூத்த வீரர்கள் எதையும் சாதிக்காமல் வாழ்க்கையை தொடர முயன்றபோது ரசிகர்கள் அவர்களைக் கைவிட்டனர்.இந்த நேரத்தில் கிரிக்கெட் போர்டும் கழுத்தில் கத்தியை வைத்து இதுதான் கடைசித் தொடர் என்று அறிவிக்குமாறு மிரட்டி வழியனுப்பியது.இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம் சவுரவ் கங்குலி. தென் ஆப்ரிக்க தொடரைப் பார்க்கும்போது எங்கே அதே நிலை டிராவிட்டுக்கும் வருமோ என்று சந்தேகமாக இருக்கிறது
                    யுவராஜ் சிங்,ரெய்னா,முரளி விஜய் ,கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் பலர் சாதிக்க காத்திருக்கும்போது டிராவிட் இந்த தொடரில் சொதப்பியது பலருக்கும் எரிச்சலை மூட்டியிருக்கலாம். இது மேலும் தொடராமல் பார்த்துக் கொள்வது டிராவிட்டுக்கு நல்லது. இங்கிலாந்துக்கு எடிராக இந்திய அணி ஜூன் மாதம் ஆடப் போகிறது. இதை தனது கடைசித் தொடர் என்று இப்போதே டிராவிட் அறிவிப்பது நல்லது. அப்போதுதான் கும்ப்ளேவைப் போல அவருக்கும் கவுரவமான ஒரு ஓய்வு கிடைக்கும்