பஞ்சாப்பின் முதல்வராக
பொறுப்பேற்றுள்ள பகவந்த் மானைப் பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..
‘ஜுக்னு’ என்பது பகவந்த்
மானின் செல்லப் பெயர். ‘ஜுக்னு’ என்ற வார்த்தைக்கு மின்மினிப் பூச்சி என்று அர்த்தம்.
‘தி கிரேட் இந்தியன்
லாஃப்டர் ஷோ’ என்ற தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியின் மூலம்தான் பகவந்த் மான் மக்களுக்கு
அதிகம் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும்
அரசியல்வாதிகளை கிண்டலடித்து பேசித்தான் மான் ரசிகர்களை சேர்த்துள்ளார்.
தேசிய விருதுபெற்ற
‘மெயின் மா பஞ்சாப் தே’ என்ற படத்திலும் மான் நடித்துள்ளார்.
2011-ம் ஆண்டில் பஞ்சாப்
மக்கள் கட்சியில் சேர்ந்ததன் மூலம் பகவந்த் மான் அரசியலில் நுழைந்தார். 2012-ம் ஆண்டில்
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆம் ஆத்மி கட்சியில்
2014-ம் ஆண்டு இணைந்த பகவந்த் மான், 2014-ம் ஆண்டு அக்கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில்
போட்டியிட்டு வென்றார். ஆனால் இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில்
போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2015-ம் ஆண்டில் தனது
மனைவியை பிரிந்துள்ளார் பக்வந்த் மான். குடும்பத்துக்கு
அதிக நேரத்தை செலவிட முடியாததால் மனைவியைப் பிரிந்ததாகச் சொல்கிறார். அவரது மனைவியும்
2 குழந்தைகளும் இப்போது கனடாவில் வசிக்கிறார்கள்.
அதிக முடிப்பழக்கம்
உள்ளவர் என்பதும், நாடாளுமன்றத்துக்கே குடித்துவிட்டு சென்றுள்ளார் என்பதும் எதிர்க்கட்சிகள்
இவர் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
குடித்துவிட்டு நடந்து செல்வதுபோன்ற வீடியோக்கள்
வெளியானதைத் தொடர்ந்து, இனி குடிக்க மாட்டேன் என்று பஞ்சாப் மக்களிடம் சத்தியம் செய்துள்ளார்
மான்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி
கட்சி வெற்றி பெற்றால் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று தொலைபேசியில் ஒரு கருத்துக்
கணிப்பை நடத்தினார் கேஜ்ரிவால். இதில் அதிகம் பேர் மானின் பெயரைச் சொன்னதால், அவர்
முதல்வர் வேட்பாளராக்கப்பட்டார்.
பகவந்த் மானுக்கு பிடித்த
நிறம் மஞ்சள். பெரும்பாலும் மஞ்சள் நிற தலைப்பாகையைத்தான்
அவர் அணிவார். மானின் பதவியேற்பு விழா அரங்கில்கூட மஞ்சள் நிறம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment