செப்டம்பர் 23
கனடா
1. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக கனடா உள்ளது.
2. 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏரிகள் கனடா உள்ளன. இதில் 31,700 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாகும்.
3. கனடாவின் மிகப்பெரிய நதியாக மெக்கன்சி உள்ளது. இந்த ஆறு 4,241 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.
4. 38 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கனடாவில், மக்கள் சராசரியாக 83 வயது வரை வாழ்கிறார்கள்.
5. படிப்பறிவு கொண்டவர்கள் அதிகம் வாழும் நாடான கனடாவில் 99 சதவீதம் பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
6. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி, அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
7. கனடா மக்களுக்கு ஹாக்கியில் ஆர்வம் அதிகம். அந்நாட்டில் மொத்தம் 2,800 ஹாக்கி மைதானங்கள் உள்ளன.
8. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் கனடாவின் ஆட்சி மொழிகளாக உள்ளன.
9. உலகின் மிகப்பெரிய நெடுஞ்சாலையாக இங்குள்ள டிரான்ஸ் கனடா ஹைவே உள்ளது. இதன் நீளம் 7,604 கிலோமீட்டர்.
10. கனடாவின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காடுகளாக உள்ளன.
-------------------------------------
செப்டம்பர் 24
அரபிக் கடல்
1. இந்தியப் பெருங்கடலின் ஒரு அங்கமாக அரபிக் கடல் உள்ளது.
2. 9-ம் நூற்றாண்டு முதல் அரேபிய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை கொண்டுசெல்ல இக்கடலை அதிகம் பயன்படுத்தியதால், இதற்கு அரபிக் கடல் என பெயர் வந்தது.
3. அரபிக் கடலின் மொத்த பரப்பளவு 38,62,000 சதுர கிலோமீட்டராகும்.
4. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஒமான், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய ஆசிய நாடுகளையும், ஜிபோடி, சோமாலியா அக்கிய ஆப்பிரிக்க நாடுகளையும் இக்கடல் எல்லையாக கொண்டுள்ளது.
5. அரபிக் கடலின் சராசரி ஆழம் 8,970 அடியாகும்.
6. ஆறுகள் அதிகமாக கலக்காததால், அரபிக்கடல் வெப்பம் கொண்டதாகவும், அதன் தண்ணீர் உப்புத்தன்மை மிகுந்ததாகவும் உள்ளது.
7. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கடலில் கப்பல்களின் போக்குவரத்து இருந்துள்ளது.
8. ஆக்சிஜன் குறைபாடு காரணமாக அரபிக் கடலில் மீன்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
9. மற்ற கடல்களுடன் ஒப்பிடும்போது அரபிக் கடலில் அதிக அளவிலான ஆமைகள் உள்ளன.
10. மும்பை, கோவா, கொச்சி, கராச்சி உள்ளிட்ட பல துறைமுகங்கள் அரபிக் கடலைச் சுற்றி உள்ளன.
--------------------------------------------------------------
செப்டம்பர் 25
ஆப்பிள் நிறுவனம்
1. ஆப்பிள் நிறுவனம் 1976-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது.
2. ரொனால்ட் வெய்ன், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய இருவருடன் சேர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். இதில் ரொனால்ட் வெய்ன் 12 நாட்களிலேயே இந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
3. ஸ்டீவ் ஜாப்ஸ், தனது 25 வயதிலேயே பில்லியனாராக உருவெடுத்தார்.
4. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஆப்பிள் பழம் மிகவும் பிடிக்கும் என்பதால், தனது நிறுவனத்துக்கும் இப்பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.
5. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
6. இங்கு பணியாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இந்தியர்களாக உள்ளனர்.
7. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் தலா 3 லட்சம் அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறது.
8. 1986-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் துணி வர்த்தகத்திலும் ஈடுபட்டது. ஆனால் இதில் அந்நிறுவனத்தால் வெற்றிபெற முடியவில்லை.
9. 2018-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக 5,72,734 ஐபோன்கள் விற்பனையாகி உள்ளன.
10. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒட்டுமொத்த ரஷ்யாவின் சந்தை மதிப்பைவிட அதிகமாகும்.
-----------------------------------------------------------------
செப்டம்பர் 26
திராட்சை
1. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியா நாட்டில் முதல் முறையாக திராட்சை பயிரிடப்பட்டது.
2. உலகில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திராட்சை வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
3. மும்பையைச் சேர்ந்த தினேஷ் சிவ்நாத் உபாத்யாய என்பவர் 3 நிமிடங்களில் 205 திராட்சைகளைச் சாப்பிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
4. திராட்சையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முட்டி வலி வராது என்று கூறப்படுகிறது.
5. திராட்சைக் கொத்துகளில் 15 முதல் 300 திராட்சைகள் வரை இருக்கும்.
6. உலகில் மொத்தமாக 75,866 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் திராட்சை பயிரிடப்படுகிறது.
7. மொத்த திராட்சை உற்பத்தியில் 71 சதவீதம் வைன் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. 27 சதவீதம் பழமாகவும், 2 சதவீதம் உலர் பழமாகவும் உண்ணப்படுகிறது.
8. ஸ்பெயின், இத்தாலி, சீனா அகிய நாடுகளில் திராட்சைகள் அதிகமாக விளைகின்றன.
9. திராட்சைகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்துகள் அதிகமாக உள்ளன.
10. திராட்சைகளை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது.
No comments:
Post a Comment