செப்டம்பர் 27
கரடி
1. கரடிகள் பெரும்பாலும் கறி, மீன் ஆகியவற்றை உண்டு உயிர்வாழும். ஒருசில வகை கரடிகள் மட்டும் செடிகளையும், பூச்சிகளையும் உண்ணும்.
2. உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன.
3. கரடிகள் பனிக்காலங்களில் அதிக நேரம் உறங்கும்.
4. ஆசியாவில் உள்ள கடுப்பு நிறக் கரடிகளுக்கு, மற்ற வகை கரடிகளைவிட மிகப்பெரிய காதுகள் உள்ளன.
5. கருப்பு நிறக் கரடிகளால் மணிக்கு 35 மைல் வேகத்தில் ஓட முடியும்.
6. ஒரு கரடியால் மற்றொரு கரடியின் முகத்தை அடையாளம் காண முடியும்.
7. கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன.
8. கரடிகளால் வேகமாக மரம் ஏறவும், நீச்சல் அடிக்கவும் முடியும்.
9. பனிக்கரடிகளால் ஓய்வெடுக்காமல் 100 மைல் தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.
10. தங்களுக்குப் பிடித்த மரத்தில் முதுகை உரசுவதற்காகவே நீண்டதூரம் நடந்துசெல்லும் குணம் கரடிகளுக்கு உண்டு.
---------------------------------------------------------------
செப்டம்பர் 28
மெழுகுவர்த்தி
1. கிமு 500-ம் ஆண்டு காலகட்டத்திலேயே ரோமானியர்கள் மெழுகுவர்த்திகளை தயாரிக்கத் தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. 1834-ம் ஆண்டில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜோசப் மோர்கன் என்பவர், மெழுகுவர்த்திகளை தயாரிப்பதற்கான இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
3. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,500 மெழுகுவர்த்திகளை தயாரிக்க முடிந்தது.
4. மின்விளக்குகளை கண்டுபிடிப்பதற்கு முன்பு இரவு நேரத்தில் ஒளியேற்ற மேற்கத்திய நாடுகளில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன.
5. உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தயாரிப்பு நிறுவனமாக ’யாங்கி கேண்டில்’ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு மெழுகுவர்த்திகளை விற்பனை செய்கிறது.
6. ஆண்டின் மற்ற சமயங்களைவிட கிறிஸ்துமஸ் காலத்தில் 35 சதவீதம் அதிகமாக மெழுகுவர்த்திகள் விற்பனையாகின்றன.
7. அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மெழுகுவர்த்திகள் விற்பனையாகின்றன.
8. உலகின் மிக நீளமான மெழுகுவர்த்தி 39 மீட்டர் நீளம் கொண்டது. இது ஸ்டாக்ஹோம் நகரில் உருவாக்கப்பட்டது.
9. மெழுகுவர்த்திகளை தயாரிப்பவர்களை ஆங்கிலத்தில் ‘சாண்ட்லர்’ என அழைக்கிறார்கள்.
10. பிறந்தநாள் கேக் மீது மெழுகுவர்த்திகளை ஏற்றும் வழக்கத்தை ஜெர்மானிய மக்கள்தான் தொடங்கிவைத்தனர்.
------------------------------------------
செப்டம்பர் 29
அமேசான் காடு
1. உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், 5.5 மில்லயன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
2. பிரேசில், பொலீவியா, பெரு, ஈகுவேடார், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் இக்காடு பரந்து விரிந்துள்ளது.
3. 40,000 செடி வகைகள், 1,300 பறவை வகைகள், 2,200 மீன் வகைகள், 427 வகை பாலூட்டிகள் அமேசான் காட்டில் உள்ளன.
4. சுமார் 500 வகையான பழங்குடியினர் இக்காட்டில் வசிக்கிறார்கள்.
5. இக்காட்டின் வழியாக ஓடும் அமேசான் நதி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.
6. இக்காட்டின் அடர்த்தியான பகுதிகளில் ஒரு சதவீதம் சூரிய வெளிச்சம் மட்டுமே ஊடுருவும்.
7. சமீப காலங்களில், இக்காட்டின் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
8. ஒவ்வொரு வினாடியிலும் 1.5 ஏக்கர் அளவிலான அமேசான் காடு அழிக்கப்பட்டு வருகிறது.
9. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளில், இக்காட்டின் செடிகள் 70 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன.
10. 2005 முதல் 2010 வரையான காலகட்டத்தில், இக்காட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது.
---------------------------------------------------------------------------------------------
செப்டம்பர் 30
காபி
1. ஏமன் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் காபி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2. அக்டோபர் 1-ம் தேதி, சர்வதேச காபி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
3. உலகில் நாளொன்றுக்கு 2.25 பில்லியன் கப் காபியை மக்கள் அருந்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. அமெரிக்கர்கள் ஆண்டொன்றுக்கு காபி குடிப்பதற்காக மட்டுமே 1,092 டாலர்களை செலவழிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. கல்லீரல் சேதமடைவதைத் தடுக்க காபி உதவுவதாக கூறப்படுகிறது.
6. காபிக்கொட்டை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. 40 சதவீத காபிக் கொட்டைகள் இங்கு உற்பத்தியாகின்றன.
7. ரோபஸ்டா, அராபிகா என்று 2 வகையான காபிக் கொட்டைகள் உள்ளன.
8. அதிக அளவு காபி குடிப்பவர்களாக பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.
9. தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்ப காபியின் வாசனையே போதுமானதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
10. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூக் இபெட்சன் என்பவர் 3.66 விநாடிகளில் ஒரு கப் காபியை குடித்து (2020-ம் ஆண்டில்) கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment