Powered By Blogger

Wednesday, December 8, 2021

பளிச் 10 - நவம்பர் 1 - 6

 நவம்பர் 1

அல்ஜீரியா
1. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் 10-வது மிகப்பெரிய நாடாகவும் அல்ஜீரியா உள்ளது.
2. அந்நாட்டின் பரப்பளவில் ஐந்தில் நான்கு பங்கு பாலைவனமாக உள்ளது.
3. அல்ஜீரியாவின் மொத்தமுள்ள நிலப்பகுதியில், சுமார் 12 சதவீத இடத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்.
4. நவம்பர் 1-ம் தேதி அல்ஜீரியாவில் தேசிய புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
5. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 7 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அல்ஜீரியாவில் உள்ளன.
6. 2019-ம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாக அல்ஜீரியா அறிவிக்கப்பட்டது.
7. கால்பந்தில் சிறந்து விளங்கும் அல்ஜீரியா, ஆப்பிரிக்க கோப்பையை 2 முறை வென்றுள்ளது.
8. அல்ஜீரிய மக்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.
9. எண்ணெய் வளமிக்க நாடான அல்ஜீரியா, மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்காத நாடாக உள்ளது.
10. அல்ஜீரிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
-----------------------------------------------------------------------------------------
நவம்பர் 2
 ஒட்டகம்
1. ‘கேமல்’ (ஒட்டகம்) என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு அழகு என்று அர்த்தம்.
2. ஒட்டகங்கள் ஒரே நேரத்தில்  200 லிட்டர்  தண்ணீர்வரை குடிக்கும்.
3.தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒட்டகங்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும்.
4. ஒட்டகங்கள் 3 மீட்டர் உயரம்வரை வளரும்.
5. உலகில் 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
6. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டகக் கறி சாப்பிடுகிறார்கள்.  அரேபிய நாட்டில் திருமணங்களின்போது விசேஷ உணவாக ஒட்டக வறுவல் பரிமாறப்படுகிறது.
7. ஒட்டகங்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓட முடியும்.
8. பண்டைக்காலத்தில் குதிரைப்படையைப் போல ஒட்டகப் படையும் பல நாடுகளில் இருந்துள்ளது.
9. கண்களை தூசி மற்றும் வெயிலில் இருந்து காப்பதற்காக ஒட்டகங்களுக்கு 3 கண் இமைகள் உள்ளன.
10. இந்தியாவில் உள்ள ஒட்டகங்களில் சுமார் 80 சதவீதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.
--------------------------------
நவம்பர் 3
புலி
1. உலகில் உள்ள புலிகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன.
2. புலிகளால் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம்வரை ஓட முடியும்.
3. புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
4. நன்கு வளர்ந்த புலிகளின் எடை 360 கிலோ வரை இருக்கும்.
5. புலிகளின் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம்வரை கேட்கும்.
6. புலிகளால் இரவில் நன்றாகப் பார்க்க முடியும். அதனால் அவை பெரும்பாலும் இரவில்தான்   வேட்டையாடும்.
7. எப்போதும் புலிகள் தனியாகத்தான் தங்கள் இரைகளை வேட்டையாடும்.
8. ஒவ்வொரு புலிகளின் உடல்களில் உள்ள வரிகளிலும் வித்தியாசம் இருக்கும். இதை வைத்து புலிகளை தனித்தனியாக அடையாளம் காண முடியும்.
9. காயங்களுக்கு சிறந்த மருந்தாக புலிகளின் எச்சில் கருதப்படுகிறது.
10. புலிகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை உறங்கும்.
------------------------------------------------------------
நவம்பர் 4
பட்டாசு
1. சீனாவில் கிபி 7-ம் நூற்றாண்டில் பட்டாசுகள் முதலில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. பட்டாசு உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது.
3. இங்கிலாந்தில் 1486-ம் ஆண்டு நடந்த மன்னர்  7-ம் ஹென்றியின் திருமணத்தில் முதல் முறையாக வாணவெடிக்கை நடத்தப்பட்டது.  
4. விண்ணில் சென்று வெடிக்கும் மிகப்பெரிய ராக்கெட் 2010-ம் ஆண்டில் போர்ச்சுக்கல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதன் எடை 13 கிலோ.
5. தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்கள் 200 மீட்டர் உயரம் வரை செல்லும்.
6. 16-ம் நூற்றாண்டிலேயே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
7. இந்தியாவின் முதலாவது பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கொல்கத்தாவில் 19-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
8. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசி முதல் இடத்தில் உள்ளது.
9. அமெரிக்காவில் 1777-ம் ஆண்டில்தான் பட்டாசுகள் முதல் முறையாக அறிமுகமாகின.
10. உலகின் மிகப்பெரிய வாணவெடிக்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த வானவேடிக்கை 61 நிமிடங்கள் 32 வினாடிகளுக்கு நீடித்தது.
 -------------------------
நவம்பர் 6
பனாமா கால்வாய்
1. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இனைக்கும் வகையில்   பனாமா நாட்டின் குறுக்கே இக்கால்வாய் உள்ளது.
2. பனாமா கால்வாயை வெட்டும் பணிகள்  1903-ம் ஆண்டில் தொடங்கி 1914-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
3. இக்கால்வாயை வெட்டும் பணியில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
4. 1977-ம் ஆண்டுவரை, இக்கால்வாய் இதைக் கட்டிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
5. இக்கால்வாயில் பயணிக்கும் கப்பல்களிடம், அவற்றின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6. ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 முதல் 40 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன.
7. பனாமா கால்வாயின் நீளம் 77 கிலோமீட்டர்.
8. இக்கால்வாய் இல்லாவிட்டால்,  கப்பல்கள் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல நேரிடும்.
9. நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக பனாமா கால்வாய் கருதப்படுகிறது.
10. பனாமா கால்வாய் திறக்கப்பட்ட நாள்முதல் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இதைக் கடந்து சென்றுள்ளன.

No comments:

Post a Comment