நவம்பர் 24
லிஃப்ட்
1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் 1859-வது ஆண்டில் முதலாவதாக லிஃப்ட் பொருத்தப்பட்டது. கயிறுகள் மூலம் இவை இயக்கப்பட்டன.
2. ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே லிஃப்ட் இருந்துள்ளது.
3. முதலில், ‘ரைசிங் ரூம்’ என்ற பெயரில்தான் லிப்ஃட்கள் அழைக்கப்பட்டன.
4. ஆரம்ப காலகட்டத்தில் லிப்ஃட்களில், மக்கள் அமர்வதற்காக பெஞ்ச்சுகள் பொருத்தப்பட்டிருந்தன.
5. இப்போது யார் வேண்டுமானாலும் லிப்ஃட்களை இயக்க முடிகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஜெர்மனியில் லிப்ஃட்களை இயக்க 3 ஆண்டுகள் பயிற்சி பெறுவது கட்டாயமாக இருந்துள்ளது.
6.லிப்ஃட்டில் செல்பவர்கள் குறிப்பிட்ட உடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற விதிகளும் ஆரம்ப காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தன.
7. இப்போதுள்ள நவீன ரக லிஃப்ட்கள் 1920-ம் ஆண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது.
8. எலிஷா கிரேவ்ஸ் ஒடிஸ் என்பவர்தான் நவீன ரக லிப்ஃட்களை வடிவமைத்தார்.
9. துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் உள்ள லிப்ஃட்கள் 163-வது மாடி (504 மீட்டர்கள்) வரை இயக்கப்படுகின்றன.
10. எஸ்கலேட்டர்களை விட லிப்ஃட்கள் 20 மடங்கு வேகத்தில் செல்லும்.
------------------------------------------------------------------
நவம்பர் 25
சைக்கிள்
1.1817-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் டிராயிஸ் என்பவர் குதிரைகளால் இழுக்கப்படாத, 2 சக்கரங்களில் செல்லும் வாகனத்தை கண்டுபிடித்தார். அதுதான் சைக்கிளின் முன்னோடியாக கருதப்படுகிறது.
2. பிற்காலத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் சைக்கிள்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, அவை நவீனமயமானது.
3. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.
4. நெதர்லாந்து மக்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஒவ்வொரு 8 மனிதர்களிலும் 7 பேர் சைக்கிள் வைத்திருப்பவர்களாக உள்ளனர்.
5. சைக்கிள்களை பயன்படுத்தும் மக்களால் ஆண்டுதோறும் 238 மில்லியன் காலன் எரிபொருள் மிச்சமாகிறது.
6. சைக்கிளில் அதிகம் பயணிப்பவர்களுக்கு இதயநோய், பக்கவாதம் உள்ளிட்டவை வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7. நியூயார்க் நகரில் 10 சதவீதம் மக்கள் சைக்கிளில்தான் பயணிக்கிறார்கள்.
8. பிரெட்.ஏ.பிர்ச்மோர் என்பவர் 1935-ம் ஆண்டில் உலகத்தை சைக்கிளில் சுற்றிவந்தார். கடல் பகுதிகளில் மட்டும் படகில் பயணித்த அவர் 25 ஆயிரம் மைல் தூரத்தை சைக்கிளில் கடந்தார்.
9. உலகின் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயமாக டூர் டி பிரான்ஸ் விளங்குகிறது.
10.1896 ஆண்டுமுதலே ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயங்கள் இடம்பெற்று வருகின்றன.
--------------------------------------------------------------------------------------------
நவம்பர் 26
சிறைச்சாலை
1.குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் பழக்கம் எகிப்து நாட்டில் முதலில் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் 16.50 லட்சம் கைதிகள் உள்ளனர்.
3. பிரேசில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தால் அவர்களின் தண்டனைக் காலத்தில் 4 நாட்கள் குறைக்கப்படும்.
4. போதிய கைதிகள் இல்லாததால், நெதர்லாந்து நாட்டில் சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.
5. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் அதிக அளவிலான கைதிகள் உள்ளனர்.
6. 2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்திய சிறைகளில் 19,242 பெண் கைதிகள் இருந்தனர். இது மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 4.12 சதவீதமாகும்.
7. இந்தியாவில் மொத்தம் 1,350 சிறைச்சாலைகள் உள்ளன.
8. இந்தியாவில் சிறையில் இருக்கும் கைதிகளில் மூன்றில் ஒரு பங்கு கைதிகள் படிப்பறிவு இல்லாதவர்கள்.
9.இந்தியாவில் 30 சதவீதம் கைதிகள்தான் 10-ம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்.
10. இந்திய சிறைகளில் சுமார் 60 ஆயிரம் போலீஸார் பணியாற்றுகின்றனர்.
-------------------------------------------
நவம்பர் 27
நேபாளம்
1. அமைதிக்கு பெயர்பெற்ற நாடாக நேபாளம் கருதப்படுகிறது. சமாதானத்தை போதித்த புத்தர், இந்நாட்டில்தான் பிறந்தார்.
2. 1,47,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேபாளத்தில், 123 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
3. உலகின் உயரமான 10 மலைச்சிகரங்களில் 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.
4.நேபாளம் இதுவரை எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்ததில்லை. அது சுதந்திர நாடாகவே இருந்துள்ளது.
5. உலகிலேயே நேபாளத்தின் அரசியலமைப்புச் சட்டம்தான் மிகவும் புதியது. கடந்த 2015-ம் ஆண்டில் இது கொண்டுவரப்பட்டது.
6. யானைகளின் மீது அமர்ந்துகொண்டு ஆடும் போலோ விளையாட்டு நேபாளத்தில் மிகவும் புகழ்பெற்றது.
7.நேபாளத்தில் சனிக்கிழமைதான் வார விடுமுறை நாளாகும். அந்நாட்டில் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வார்கள்.
8. நேபாளத்தின் மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள்.
9.இந்நாட்டில் வெறும் 59 கிலோமீட்டர் நீளத்துக்குத்தான் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10. நேபாளத்தின் தேசிய விளையாட்டாக வாலிபால் உள்ளது.
No comments:
Post a Comment