நவம்பர் 16
ஒட்டகச் சிவிங்கி
1. ஒட்டகச் சிவிங்கிகளால் மணிக்கு 35 மைல்கள் வேகத்தில் ஓட முடியும்.
2. பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் நிற்கவும் சில சமயம் ஓடவும் ஒட்டகச் சிவங்கிகளால் முடியும்.
3. 2 நாட்களுக்கு ஒரு முறைதான் ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் குடிக்கும்.
4. ஒட்டகச் சிவிங்கிகளின் நாக்கு 20 அங்குலம்வரை நீளம் கொண்டதாக இருக்கும்.
5. எப்போதும் ஏதாவது இலைகளை அசைபோடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஒட்டகச் சிவிங்கிகள், நாளொன்றுக்கு சுமார் 35 கிலோ உணவைச் சாப்பிடும்.
6. ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தின் எடை 11 கிலோ.
7. ஒட்டகச் சிவிங்கிகள் 25 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
8. ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி ஒட்டகச் சிவிங்கிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
9. ஒட்டகச் சிவிங்கிகளின் காலடிகள் 30 சென்டிமீட்டர் வரை விட்டம் கொண்டதாக இருக்கும்.
10.ஒட்டகச் சிவிங்கிகள் நீண்ட நேரம் தூங்காது. அவை 5 நிமிடங்களைக் கொண்ட குட்டித் தூக்கங்களையே போடும்.
----------------------------------------------------------------------------------------------
நவம்பர் 17
ஜப்பான்
1. உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டில் ஆண்டொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
2. ஜப்பானிய மக்கள் அதிகமான ஆயுட்காலம் கொண்டவர்கள். அவர்கள் சராசரியாக 84 ஆண்டுகள்வரை வாழ்கிறார்கள்.
3. ஜப்பானின் 69 சதவீத நிலப்பகுதி காடுகளாக உள்ளன.
4. மீன்வளம் அதிகம் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு கடல்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன.
5. மிகச் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.
6. ஜப்பனில் அதிகபட்சமாக 110 எரிமலைகள் உள்ளன.
7. செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஜப்பானியர்களுக்கு ஆர்வம் அதிகம். அந்நாட்டில் குழந்தைகளைவிட நாய்களும் பூனைகளும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
8.ஜப்பானில் 12.7 சதவீத நிலம் மட்டுமே விவசாயத்துக்கு உகந்ததாக உள்ளது.
9. அந்நாட்டின் மிகப்பெரிய நதியாக ஷினானோ நதி உள்ளது. இதன் நீளம் 228 மைல்கள்.
10. மீன், சிக்கன், குதிரைக் கறி போன்றவற்றை வேகவைக்காமல் பச்சையாக உண்ணும் வழக்கம் சில ஜப்பானிய மக்களிடையே உள்ளது.
--------------------------------------------------------------------------
நவம்பர் 18
ஸ்டிராபெரி
1. ஸ்டிராபெரி பழங்கள் முதலில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரிட்டானி என்ற நகரில் விளைவிக்கப்பட்டன.
2. உலகில் 103 வகையான ஸ்டிராபெரி பழங்கள் உள்ளன.
3. ஆரஞ்சு பழங்களைவிட ஸ்டிராபெரி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
4. சிவப்பு நிறம் மட்டுமின்றி மஞ்சள், நீலம், வெள்ளை, கருப்பு நிறங்களிலும் ஸ்டிராபெரி பழங்கள் உள்ளன.
5. பெல்ஜியம் நாட்டில் ஸ்டிராபெரி பழத்துக்காகவே பிரத்யேக அருங்காட்சியகம் உள்ளது.
6. ஒவ்வொரு ஸ்டிராபெரி பழத்திலும் சுமார் 200 விதைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
7. ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் டன் ஸ்டிராபெரி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
8.ஸ்டிராபெரி பழ உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
9. உலகின் மிகப்பெரிய ஸ்டிராபெரி பழம் ஜப்பானில் கோஜி நாகோ என்ற விவசாயியால் விளைவிக்கப்பட்டது. இதன் எடை 250 கிராம்.
10. ஸ்டிராபெரியால் செய்யப்பட்ட டாஹோ என்ற பழரசம் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
----------------------------------------------------------------------------------
நவம்பர் 19
வியட்நாம் போர்
1. வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது.
2. வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
3. ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இப்போரில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பியது.
4. இப்போரில் வடக்கு வியட்நாமுக்கு சோவியத் யூனியன் ஆதரவு அளித்தது.
5. வியட்நாம் போரைக் கண்டித்து அமெரிக்காவிலேயே போராட்டங்கள் நடந்துள்ளன.
6. இப்போரில் வடக்கு வியட்நாம் படைகள் ஏகே 47 வகை துப்பாக்கிகளையும், தெற்கு வியட்நாம் மற்றும் அமெரிக்க படைகள் எம்-16 ரைபிள்களையும் அதிகமாக பயன்படுத்தின.
7. 1963-ம் ஆண்டில் வியட்நாம் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் கென்னடி விரும்பியுள்ளார். ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
8. 13 லட்சம் போர் வீரர்களும், 10 லட்சம் பொதுமக்களும் வியட்நாம் போரில் உயிரிழந்தனர்.
9. நிக்சன் அமெரிக்க அதிபரான பிறகு, வியட்நாமில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கத் தொடங்கின.
10. 1975-ம் ஆண்டில் தெற்கு வியட்நாமின் தலைநகரான சாய்கானை வடக்கு வியட்நாம் வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம் 2 நாடுகளையும் இணைந்தனர்.
-----------------------------------------------
No comments:
Post a Comment