Powered By Blogger

Wednesday, December 8, 2021

பளிச் 10 - நவம்பர் 12- 15

நவம்பர்  12
கலங்கரை விளக்கம்
1. உலகின் முதலாவது கலங்கரை விளக்கம், எகிப்து நாட்டில்  உள்ள அலெக்சான்டிரியா நகரில் கிமு 3-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
2. உலகில் சுமார் 18,600 கலங்கரை விளக்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிக அளவிலான கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அந்நாட்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
4. இந்தியாவில் 189 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
5. இந்தியாவில் முதல் கலங்கரை விளக்கம் மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
6. மகாபலிபுரம் கலங்கரை விளக்கத்தை 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசு புதுப்பித்தது.
7. ஸ்பெயின் நாட்டின் லா கொருனா துறைமுகத்தில் உள்ள கலங்கரை விளக்கம்தான், தற்போதுள்ள பழமையான கலங்கரை விளக்கம். இது கி.பி முதலாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
8. மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, மரக்கட்டைகள், நிலக்கரி மற்றும் எரிவாயுவைக் கொளுத்தி, அதிலிருந்து வரும் வெளிச்சதால் கப்பல்களுக்கு வழிகாட்டி உள்ளனர்.
9. உலகின் உயரமான கலங்கரை விளக்கம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ளது. அதன் உயரம் 133 மீட்டர்கள்.
10. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஸ்மீட்டன் என்பவர், 1759-ம் ஆண்டில் தற்போதுள்ள நவீன கலங்கரை விளக்கத்தை வடிவமைத்தார்.
------------------------------------------------------------------------------------------------
நவம்பர் 13
யானை
1. உலகின் மிகப்பெரிய மிருகமான யானைகள், சுமார் 10 டன் வரை எடை கொண்டவை.
2. ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என்று 2 வகையான யானைகள் உள்ளன.
3.யானைகள் 13 அடி உயரம்வரை வளரும்.
4. யானைகள்  சராசரியாக 70 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
5.   யானைகளால்   தங்கள் தும்பிக்கையில் 8 லிட்டர் தண்ணீர் வரை வைத்திருக்க முடியும்.
6.யானைகளின் மூளை, மனிதர்களின் மூளையைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும்.
7. யானைகள் நாளொன்றுக்கு சராசரியாக 140 கிலோ எடைகொண்ட உணவை உண்ணும்.
8. மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் உணர்ச்சிகளும் குடும்ப பாசமும் உள்ளது.
9.பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கவும், உடலின் ஈரப்பதத்தை காப்பாற்றிக்கொள்ளவும் யானைகள் தங்கள் மீது மண்ணை வாரிப் போடுகின்றன.
10.யானைகள் கருவுற்ற பிறகு குட்டிகளை ஈன 22 மாதங்கள் ஆகும்.
-----------------------------------------
நவம்பர் 14
குடை
1.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் குடைகளைப்  பயன்படுத்தி  வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. ஆரம்ப காலகட்டத்தில், பனை ஓலைகளால் குடைகள் தயாரிக்கப்பட்டன.
3. பண்டைய காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக குடைகள் இருந்துள்ளன.
4. குடைகள் தயாரிப்பில் சீனா முதலாவது இடத்தில் உள்ளது.
5. சீனாவில் உள்ள ஷாங்யு நகரில் மட்டுமே குடைகளைத் தயாரிக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.
6. ஸ்டீல் கம்பிகளைக் கொண்ட நவீன ரக குடைகளை சாமுவேன் பாக்ஸ் என்பவர் 1852-ம் ஆண்டில் முதல் முறையாக வடிவமைத்தார்.
7. பிராட்ஃபோர்ட் பிலிப்ஸ் என்பவர் 1969-ம் ஆண்டில் மடக்கும் குடைகளை  (folding umbrella) கண்டுபிடித்தார்.
8.அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 33 மில்லியனுக்கும் மேற்பட்ட குடைகள் விற்கப்படுகின்றன.
9. ஜப்பானிய மக்கள் சராசரியாக 3.3 குடைகளை வைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
10. வீட்டுக்குள் குடையை விரித்து வைத்தால் கெட்ட விஷயம் நடக்கும் என்பது எகிப்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
------------------------------------------------------------
நவம்பர் 15
டேபிள் டென்னிஸ்
1. கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு  அடுத்ததாக அதிகம் பேரைக் கவர்ந்த ஆட்டமாக டேபிள் டென்னிஸ் உள்ளது.
2. 1988-ம் ஆண்டுமுதல் ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஆடப்பட்டு வருகிறது.
3. சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு 1926-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 226 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
4. டேபிள் டென்னிஸ் விளையாட்டில்  சீன வீரர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
5. கண்களை பாதிக்கும் என்று கூறி 1930-ம் ஆண்டுமுதல் 1950-ம் ஆண்டுவரை சோவியத் யூனியனில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
6. 2015-ம் ஆண்டுமுதல் செல்லுலாய்ட் பந்துக்கு பதிலாக பிளாஸ்டிக் பந்துகள் டேபிள் டென்னிச் விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
7. 2000-ம் ஆண்டுவரை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒரு செட் என்பது 21 புள்ளிகளைக் கொண்டதாக இருந்தது. பின்னர் அது 11 புள்ளிகளாக குறைக்கப்பட்டது.
8. ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் வீரர்கள் உலகில் பல்வேறு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
9.டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு,  ‘பிங் பாங்’ என்று மற்றொரு பெயர் உண்டு.

10. டேபிள் டென்னிஸ் விளையாட்டு 1880-களில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment