ஜூலை 10
இந்தியன் ரயில்வே
1.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 8,421 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
2.இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853-ம் ஆண்டு மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.
3.திப்ரூகரில் (அசாம்) இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ரயில்தான் இந்தியாவில் மிக நீண்ட தூரம் (4,226 கிலோமீட்டர்) செல்லும் ரயிலாகும்.
4.முதல் மின்சார ரயில் , மும்பை விக்டோரியா டெர்மினலுக்கும் குர்லாவுக்கும் இடையே 1925-ம் ஆண்டில் இயக்கப்பட்டது.
5.இந்தியாவில் மெதுவாக ஓடும் ரயில், நீலகிரி மலை ரயிலாகும். இது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
6.மிகப்பெரிய ரயில் நிலையம் மதுராவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
7.நாட்டின் பரபரப்பான ரயில் நிலையமாக ஹவுரா உள்ளது. இங்கு நாள்தோறும் 974 ரயில்கள் வந்து செல்கின்றன.
8.இந்திய ரயில்வேயில் 14 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
9.கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை 1986-ம் ஆண்டில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது.
10. இந்தியாவில் சென்னை, திருச்சி உட்பட 8 இடங்களில் ரயில்வே மியூசியங்கள் உள்ளன.
------------------------------------------------------------
ஜூலை 11
எரிமலைகள்
1.ரோமானியர்களின் அக்னிதேவன் ‘வல்கன்’. அந்த பெயரை ஒட்டித்தான் எரிமலைகளுக்கு வால்கனோ என பெயர் வந்தது.
2. உலகில் சுமார் 1,500 எரிமலைகள் உள்ளன.
3.உறங்கும் எரிமலைகள், செயலற்ற எரிமலைகள், செயல்படும் எரிமலைகள் என 3 வகையான எரிமலைகள் உள்ளன.
4.எரிமலைக் குழம்பின் வெப்பநிலை 1,250 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
5.கடல்களுக்கு அடியில் சுமார் 10 லட்சம் எரிமலைகளாவது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
6.பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் அதிகபட்சமாக 250 எரிமலைகள் உள்ளன.
7.உலகின் மிக உயரமான எரிமலை ஹவாய் தீவில் உள்ளது. இதன் உயரம் 4,207 மீட்டர்கள்.
8.உலகில் இருப்பதைவிட மிகப்பெரிய எரிமலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது. அதன் உயரம் 21 கிலோமீட்டர்.
9.எரிமலைகள் வெடிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் சாம்பல், 30 கிலோமீட்டர் பரப்பளவு வரை காற்றில் கலக்கும்.
10.இந்தோனேசியாவில் உள்ள காவா ஜென் என்ற எரிமலை, நீல நிற ஜுவாலையை வெளியிடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 12
கார்
1.உலகின் முதல் கார், கார்ல் பென்ஸ் என்பவரால் 1885-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
2.பென்ஸால் உருவாக்கப்பட்ட முதல் காரின் வேகம், மணிக்கு 15 கிலோமீட்டராக இருந்தது.
3.உலகில் தற்போது சுமார் 1.2 பில்லியன் கார்கள் உள்ளன.
4.ஒவ்வொரு காரிலும் சுமார் 30 ஆயிரம் உதிரி பாகங்கள் உள்ளன.
5.உலகில் அதிகமான கார்களை சீனா தயாரிக்கிறது. 2019-ம் ஆண்டில் சீனாவில் 25.7 மில்லியன் கார்கள் தயாரிக்கப்பட்டன.
6.உலகில் உள்ள கார்களில், நாலில் ஒரு பங்கு கார்கள் அமெரிக்காவில் உள்ளன.
7.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மக்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் கார்கள் உள்ளன.
8. காரிகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஏர் பேக்குகள் 1974-ம் ஆண்டில் அறிமுகமானது.
9.16 சதவீத கார் உரிமையாளர்கள் தங்களின் கார்களை கழுவுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
10.கார் பார்க்கிங் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கும் நகரமாக லண்டன் உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 13
கொசு
1.எல்லா கொசுக்களும் மனிதர்களைக் கடிப்பதில்லை. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும்.
2.மனிதர்களை கடிக்காமல், விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கும் பெண் கொசுக்களும் உள்ளன.
3.கொசுக்களால் வேகமாக பறக்க முடியாது. அதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 1.5 கிலோமீட்டர்தான்.
4.அமெரிக்க கொசு கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் கணக்குப்படி உலகில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன.
5.கொசுக்கள் ஒரே நேரத்தில் தங்கள் உடல் எடையைவிட மூன்று மடங்கு ரத்தத்தைக் குடிக்கும்.
6.கொசுக்களுக்கு ஆயுள் குறைவு. 5 முதல் 6 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும்.
7.கொசுக்கள் தங்கள் சிறகுகளை விநாடிக்கு 300 முறைக்குமேல் அடிப்பதால்தான் அது பறக்கும் சத்தம் அதிகமாக கேட்கிறது.
8.கொசுக்கள் முட்டையிடுவதற்கு தண்ணீர் அவசிய தேவையாக உள்ளது.
9.சில அங்குலம் பரப்பளவுக்கு தண்ணீர் இருந்தால்கூட கொசுக்களால் முட்டையிட முடியும்.
10.கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா காய்ச்சலால் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment