Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 - ஜூலை 6 - 9

 பளிச்  பத்து

------------------------
ஜூலை 6
காகிதம்
1.உலகின் முதல் காகிதம், 1900 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிவில் தயாரிக்கப்பட்டது.
2.பேப்பர் எனும் வார்த்தை ‘பேப்பிரஸ்’ என்ற எகிப்து வார்த்தையில் இருந்து பிறந்தது.
 3.ஒரு பைன் மரத்தில் இருந்து 80,500 காகித ஷீட்களை தயாரிக்கலாம்.
4.உலகில் வெட்டப்படும் மரங்களில் 42 சதவீதம்  மரங்கள், காகிதங்களைத் தயாரிப்பதற்காக வெட்டப்படுகின்றன.
5.மரங்களில் இருந்து மட்டுமின்றி,  சில வகை பருத்திகளில் இருந்தும் காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன.
6.ஒரு ஏ-4 ஷீட் காகிதத்தை உருவாக்க 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
7.இதுவே பழைய காகிதத்தை மறுசுழற்சி செய்து புதிய காகிதத்தை தயாரிக்க 85 சதவீதம் குறைந்த தண்ணீரே தேவைப்படும்.
8.உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் 1,200 டன் காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
9.அமெரிக்காவில் உருவாகும் குப்பைகளில் 40 சதவீதத்துக்கும் மேல் காகிதங்களாலான குப்பைகளாக உள்ளன.
10.காகிதங்களை அதிகம் தயாரிக்கும் நாடாக சீனா உள்ளது. உலகத்தின் காகித தேவையில் 25 சதவீதத்தை அந்நாடு பூர்த்தி செய்கிறது.
-----------------------------------------------------------
ஜூலை 7
தக்காளி
1.சிவப்பு மட்டுமே தக்காளியின் நிறமல்ல. மஞ்சள், ஊதா வெள்ளை என பல நிறங்களில்   தக்காளிகள்  உள்ளன.
2.தக்காளிகள் முதலில் பெரு நாட்டில் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3.உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் உள்ளன.
4.தக்காளியின் எடையில் 94.5 சதவீதம் தண்ணீராகும்.
5.பைபிளில் தக்காளியைப் பற்றி குறிப்பிடப்படாததால், ஆரம்பத்தில் இதை சமையலுக்கு பயன்படுத்த ஐரோப்பியர்கள் அஞ்சியுள்ளனர்.
6.தக்காளிகளை அதிக அளவில் விளைவிக்கும் நாடான சீனா,  கடந்த 2010-ம் ஆண்டில் 41.8 மில்லியன் டன் தக்காளிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
7.உலகின் மிகப்பெரிய தக்காளி, 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் விளைந்தது. இதன் எடை 3.5 கிலோ.
8.ஒரு தக்காளியில் சராசரியாக 22 கலோரி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
9.2019-20-ல் இந்தியாவில் 20 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
10.இந்தியாவில் தக்காளியை அதிகம் விளைவிக்கும் மாநிலமாக ஆந்திரா உள்ளது.
-------------------------------------------
ஜூலை 8
டெல்லி செங்கோட்டை
1.டெல்லி செங்கோட்டை 1648-ம் ஆண்டு ஷாஜகானால் கட்டப்பட்டது.
2.ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு ஷாஜகான் தலைநகரை மாற்றியபோது, செங்கோட்டை கட்டப்பட்டது.
3.செங்கோட்டை 256  ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
4.ஆரம்பத்தில் செங்கோட்டை வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. பிற்காலத்தில் இக்கட்டிடத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய அரசு, அதற்கு சிவப்பு நிற வண்ணத்தை பூசியுள்ளது.
5.செங்கோட்டையின் நிஜப் பெயர் ‘கிலா-கி-முபாரக்’. பிற்காலத்தில் அதன் சிவப்பு நிறம் காரணமாக செங்கோட்டை என பெயர் பெற்றது.
6.  உஸ்தாத் அஹமத் லாஹுரி என்ற கட்டிடக்கலை வல்லுநர்தான் டெல்லி செங்கோட்டையை  வடிவமைத்தார்.
7.முதல் சுதந்திர தினம் முதல் இதுவரை, டெல்லி செங்கோட்டையில்தான் பிரதமர்கள் கொடியேற்றி வருகிறார்கள்.
8.டெல்லி கேட், லாகூர் கேட் என செங்கோட்டைக்கு 2 வாயில்கள் உள்ளன.
9.இக்கோட்டையில் லாகூர் கேட் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முக்கியஸ்தர்கள் மட்டுமே டெல்லி கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
10. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக 2007-ம் ஆண்டில் செங்கோட்டை அறிவிக்கப்பட்டது.
------------------------------
ஜூலை 9
 தொலைக்காட்சி  
1. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1939-ம் ஆண்டில் நடந்த உலகக் கண்காட்சியில் முதல் முறையாக தொலைக்காட்சி ( டிவி) மக்களின் பார்வைக்கு  வைக்கப்பட்டது.
2.ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்தன. 1954-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் முதல் முறையாக வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமானது.
3.தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் விளம்பரம் புலோவா என்ற கைக்கடிகாரத்தின் விளம்பரமாகும். 1941-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இது ஒளிபரப்பானது.
4.செனித் என்ற நிறுவனம் 1950-ம் ஆண்டில் முதன்முதலாக தொலைக்காட்சிக்கான  ரிமோட் கண்ட்ரோலை உருவாக்கியது.
5.இந்தியாவில் தூர்தர்ஷன் சேனல் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கியது.
6.முதலில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 40 கிலோமிட்டர் தூரத்துக்கு மட்டுமே தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது.
7.தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1976-ம் ஆண்டுமுதல் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
8.1982-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாதான் இந்தியாவில் வண்ணத்தில் ஒளிபரப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும்.
9.2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் மொத்தம் 197 மில்லியன் தொலைக்காட்சிகள் உள்ளன.
10.2020-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் 885 பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.

No comments:

Post a Comment