மீராபாய் சானு
1.சாய்கோம் மீராபாய் சானு, மணிப்பூரில் இம்பால் நகருக்கு அருகில் உள்ள சிற்றூரில் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தார். 6 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் மீராபாய் கடைக்குட்டி ஆவார்.
2.மீராபாய் சானுவின் அப்பா சாய்கோம் கிரிடி மீடி, பொதுப்பணித் துறையில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தார்.
3.மீராபாய் சானுவின் அம்மா, சாய்கோம் ஓங்பி டோம்பி லீமா, உள்ளூரில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
4. மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்டு, அவர் இவ்விளையாட்டில் இணைந்தார்.
5.தனது 11 வயதிலேயே உள்ளூரில் நடந்த பளுதூக்கும் போட்டி ஒன்றில் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
6. 2014-ம் ஆண்டில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கினார் மீராபாய் சானு.
7. 2018-ம் ஆண்டில் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், நீண்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
8.மீரா பாய்க்கு பத்மஸ்ரீ விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
9. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார் மீராபாய் சானு.
10. மல்யுத்த போட்டிக்காக ஒருமுறை தனது சகோதரியின் திருமணத்துக்குகூட செல்லாமல் தவிர்த்துள்ளார் மீராபாய்.
No comments:
Post a Comment