ஆகஸ்ட் 12
மம்முட்டி
1. மம்முட்டியின் முழுப் பெயர், ‘முகமது குட்டி இஸ்மாயில் பணிப்பரம்பில்’ என்பதாகும்.
2. மம்முட்டியின் முதல் படமான, ‘அனுபவங்கள் பாளிச்சகள்’ 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியானது.
3. திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்முட்டி, 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
4. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.
5. ‘ஜ்வாலயாய்’ என்ற பெயரில், தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் மம்முட்டி தயாரித்துள்ளார்.
6. மம்முட்டி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘காழ்ச்சப்பாடு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி உள்ளது.
7. வாலிபால் விளையாட்டு வீரரான மம்முட்டி, கேரள வாலிபால் லீக்கின் பிராண்ட் தூதராகவும் உள்ளார்.
8. எல்எல்பி படித்தவரான மம்முட்டி, 2 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
9. மம்முட்டிக்கு ராசியான எண் 369. அவரது கார்கள் அனைத்துக்கும் பதிவு எண்ணாக இதுதான் உள்ளது.
10.மீசையை எடுக்கப் பிடிக்காததால், அண்ணல் அம்பேத்கர் வேடத்தில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் மம்முட்டி தயங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 13
மிக்கி மவுஸ்
1. வால்ட் டிஸ்னி, இவர்க்ஸ் ஆகியோர் இணைந்து 1928-ம் ஆண்டில் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கினர்.
2.மிக்கி மவுஸ் கதாபாத்திரம் முதல் முறையாக ‘ஸ்டீம்போட் வில்லி’ என்ற குறும்படத்தில் தோன்றியது.
3. ‘ஒஸ்வால்ட்’ என்ற முயல் கதாபாத்திரத்துக்கு பதிலாக மிக்கி மவுஸ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது.
4. இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் மோர்டிமர் என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தது. வால்ட் டிஸ்னியின் மனைவிதான் அதற்கு பதில் மிக்கி மவுஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.
5 .1928-ம் ஆண்டுமுதல் 1947-ம் ஆண்டுவரை மிக்கி மவுஸ் கதாபாத்திரத்துக்கு வால்ட் டிஸ்னிதான் குரல் கொடுத்துவந்தார்.
6. மிக்கி மவுஸ், சீனாவில் ‘மி லாவ் ஷு’ என்றும், இத்தாலியில் ‘டோபோலினோ’ என்றும் அழைக்கப்படுகிறது.
7. முதல் 2 மிக்கி மவுஸ் திரைப்படங்களைத் தயாரிக்க 2,500 அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவானது.
8. திரைப்படங்களில் வெற்றி பெற்றதால், காமிக்ஸ்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றிலும் மிக்கி மவுஸ் இடம்பெறத் தொடங்கியது.
9. மிக்கி மவுஸ் தோன்றிய முதல் வண்ணப் படம் ’தி பாண்ட் கான்சர்ட்’. 1935-ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.
10. மிக்கி மவுஸ் தோன்றும் 121 திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
--------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 14
பாகிஸ்தான்
1. ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.
2. 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகை 21.6 கோடியாகும்.
3. பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. ஆனால் அங்கு 7 சதவீதம் பேர் மட்டுமே இம்மொழியைப் பேசுகின்றனர்.
4. பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களில் 96.4 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.
5. அணு ஆயுத ஆற்றலைப் பெற்ற முதலாவது முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
6. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா சமாதானத்துக்கான நோபல் பரிசையும், அப்துஸ் சலாம் இயற்பியலுக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளனர்.
7. பாகிஸ்தானின் தேசிய பானமாக கரும்பு ஜூஸ் உள்ளது.
8. அதிக அளவிலான ராணுவ வீரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 11-வது இடத்தில் (6.17 லட்சம் ராணுவ வீரர்கள்) உள்ளது.
9. பாகிஸ்தானின் மிகப்பெரிய மசூதியாக ஷா ஃபைசல் மசூதி உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் தொழுகை நடத்த முடியும்.
10. கால்பந்து விளையாட்டில் அதிகம் ஈடுபடாவிட்டாலும், கால்பந்துகளை அதிகம் தயாரிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
----------------------------------------------------------
ஆகஸ்ட் 15
ஆப்பிள்
1. கிமு 6,500 ஆண்டிலேயே ஆப்பிள் பழம் இருந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2. உலகில் 7,500-க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 2,500 ஆப்பிள் வகைகள் உள்ளன.
3. சீனா, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் ஆப்பிள் பழங்கள் அதிகமாக விளைகின்றன.
4. ஆப்பிள் மரங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்களைத் தரும்.
5. ஆப்பிள் மரங்கள் 100 ஆண்டுகள் வரை இருக்கும்.
6. உலகில் ஆண்டொன்றுக்கு 66 மில்லியன் டன் ஆப்பிள் உற்பத்தி செய்யப்படுகிறது.
7. உடலுக்கு ஆரோக்கியமானதாக ஆப்பிள் கருதப்பட்டாலும், அதன் விதைகள் விஷத்தன்மை கொண்டதாக உள்ளன.
8. ஆப்பிள்களில் 25 சதவீதம் காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது.
9. ஆப்பிள்களில் கொழுப்புசத்து, சோடியம் ஆகியவை அறவே இல்லை.
10. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஆப்பிள்கள் அதிகமாக விளைகின்றன.
No comments:
Post a Comment