Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 -ஆகஸ்ட் 16 - 19

 ஆகஸ்ட் 16

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
1. கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என்று அழைக்கப்படும்  லார்ட்ஸ்  மைதானம் 1814-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
2. இம்மைதானத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவரான ‘தாமஸ் லார்ட்ஸ்’ என்பவரின்  நினைவாக இம்மைதானத்துக்கு லார்ட்ஸ் மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டது.
3. லார்ட்ஸ் மைதானம் மெரில்போன் கிரிக்கெட் கிளப்புக்கு (எம்சிசி) சொந்தமானது.
4. 1884-ம் ஆண்டில் இம்மைதானத்தில் ஆடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
5. இம்மைதானத்துக்குள் கிரிக்கெட் சார்ந்த மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகப்பெரிய அளவிலான நூலகமும் உள்ளது.
6. 2012-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடத்தப்பட்டது. அதேபோல் 2-வது உலகப் போரின்போது, நிதி திரட்டுவதற்காக இங்கு பேஸ்பால்  போட்டி நடத்தப்பட்டுள்ளது.
7. 1934-ம் ஆண்டுமுதல் 2009-ம் ஆண்டுவரை இங்கு ஆடிய டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும்  ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
8. இம்மைதானத்தில் 3 சதங்களை அடித்த ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமை இந்தியாவின் திலீப் வெங்சர்க்காருக்கு உண்டு.
9. 1930-ம் ஆண்டு இம்மைதானத்தில் நடந்த டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேன் 254 ரன்களைக் குவித்தார்.
10. லார்ட்ஸ் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.
----------------------------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 17
சிங்கம்
1. சிங்கங்கள் 14 வயதுவரை உயிர்வாழும்
2. பெண் சிங்கங்கள் பசியாற நாளொன்றுக்கு 5 கிலோ கறியும், ஆண் சிங்கங்கள் பசியாற நாளொன்றுக்கு 7 கிலோ கறியும் தேவைப்படும்.
3. சிங்கங்களால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடமுடியும்.
4. சிங்கங்கள் அதிகம் சோம்பல் கொண்ட விலங்காக கருதப்படுகிறது. அவை நாளொன்றுக்கு 20 மணிநேரத்துக்கும் மேல் உறங்கும்.
5. பெண் சிங்கங்கள் 120 முதல் 182 கிலோ வரை எடை கொண்டதாகவும், ஆண் சிங்கங்கள் 150 முதல் 250 கிலோ வரை எடை கொண்டதாகவும் இருக்கும்.
6. சிங்கங்களின் பார்வை, மனிதர்களின் பார்வையைவிட 5 மடங்கு கூர்மையானதாக இருக்கும்
7. தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான சிங்கங்கள் உள்ளன. உலகில் தற்போது சுமார் 40 ஆயிரம் சிங்கங்களே இருப்பதாக கூறப்படுகிறது.
8. பெண் சிங்கங்கள் பெரும்பாலும் கூட்டமாகச் சென்றே வேட்டையாடும்.
9. சிங்கங்களால் நான்கைந்து நாட்கள்கூட தண்ணீர் குடிக்காமல் வாழ முடியும்.
10. ஆண் சிங்கங்களின் கர்ஜனை 5 கிலோமீட்டர் தூரம் வரைகூட கேட்கும்.
---------------------------------------------------------------------
ஆகஸ்ட் 18
1.உலகில் சுமார் 38 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன.
2. எல்லா வகையான சிலந்திகளுக்கும்  8 கால்கள் உள்ளன.
3. பறவைகள், வவ்வால்கள் ஆகியவற்றை விட அதிக அளவிலான பூச்சிகளை  சிலந்திகள் உண்ணும்.
4. சிலந்திகளின் வலையில், ‘வைட்டமின் கே’ உள்ளது. காயத்தின் மீது இதை வைத்தால், ரத்தத்தை கட்டுப்படுத்தும்.
5. மிகப்பெரிய சிலந்தியான ‘கோலியத் பேர்ட் ஈட்டர்’ 11 அங்குலம் வரை வளரும்.
6. சிலந்திகளில் சிலவற்றுக்கு 6 கண்களும், சிலவற்றுக்கு 8 கண்களும் உள்ளன.
7.ஒரு சில வகை சிலந்திகள் மற்ற சிலந்திகளை உண்ணும்.
8. சிலந்திகளால் ஒரு மணி நேரத்துக்குள் தங்கள் வலையைப் பின்ன முடியும்.
9. ஒருசில வகை சிலந்திகள் தண்ணீருக்குள்ளும் வாழும்.  
10. சிலந்திகளுக்கு பற்கள் கிடையாது. அது ஒரு வகையான திரவத்தை செலுத்தி, பூச்சிகளை உருக்கிய பின்பு இவை உண்ணுகின்றன.
--------------------------
 ஆகஸ்ட் 19
1.உலகின் முதல் புகைப்படம் 1826-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஜோசப் நீசஃபர் நீப்ஸ் என்பவர் இப்படத்தை எடுத்தார்.
2. உலகின் முதல் கலர் புகைப்படம், 1861-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவரால் எடுக்கப்பட்டது.
3.  மெகாபிக்சல் என்ற வார்த்தை, 1984-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
4. உலகின் முதல் போட்டோ ஸ்டுடியோ, நியூயார்க் நகரில் 1925-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
5. பீட்டர் லிக் என்பவர் எடுத்த புகைப்படம்தான், உலகிலேயே மிக அதிகமாக 6.5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
6. 1839-ம் ஆண்டு முதலே  கேமராக்களில் செல்ஃபிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
7. ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் 19-ம் தேதி,  ‘உலக  போட்டோகிராபி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
8. 1851-ம் ஆண்டில் முதல் முறையாக சூரிய கிரகணம் புகைப்படமாக எடுக்கப்பட்டது.
9. டிஜிட்டல் கேமரா, 1975-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
10. மும்பையைச் சேர்ந்த திலீஷ் பரேக் என்பவர்,  4,425 கேமராக்களை சேகரித்து வைத்துள்ளார்.

No comments:

Post a Comment