Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 - ஜூலை 26 - 29

 ஜூலை 26

மாம்பழம்
1. மாம்பழங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது.
2. மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும்.
3. மாமரங்கள் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும்.
4. உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன. . இந்தியாவுக்கு அடுத்ததாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் விளைகின்றன.
5. உலகில் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.
6. புத்தர் மாமரங்களின் கீழ் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், அம்மரத்தை பவுத்த மதத்தினர் புனிதமானதாக கருதுகின்றனர்.
7. மாம்பழங்களால் கவரப்பட்ட மாவீரன் அலெக்சாஸ்டர், தன்னுடன்  நிறைய மாம்பழங்களை கிரேக்க நாட்டுக்கு எடுத்துச் சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
8. முகாலயர்களின் ஆட்சிகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே மாமரங்களை வளர்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் இந்த தடையை ஷாஜஹான் நீக்கினார்.
9. இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாக மாம்பழம் உள்ளது.
10 . 2010-ம் ஆண்டில், வங்கதேசத்தின் தேசிய மரமாக மாமரம் அறிவிக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------
ஜூலை 27
நடைப்பயிற்சி
1.  நடைப்பயிற்சி செய்வதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதுடன்  ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
2. தினந்தோறும்  10 ஆயிரம் அடிகளுக்கு மேல் எடுத்து வைத்து நடந்தால், எடை குறையும் என்று  மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
3. நாள்தோறும்  அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்தால் ஆண்டுக்கு 330 டாலர் மருத்துவ செலவை மிச்சப்படுத்தலாம் என்று அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
4. உலகில் நீண்ட தூரம் நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர்  கனடா நாட்டைச் சேர்ந்த ஜீன் பெலிவோ. இவர் 46,600  மைல் தூரம் நடந்து 64 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
5. அமெரிக்கர்கள் அதிகம் நடப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள்  சராசரியாக நாளொன்றுக்கு 5,117 அடிகளைத்தான் எடுத்து வைக்கிறார்களாம்.
6. வளர்ந்த நாடுகளில் அதிகம் நடப்பவர்களைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் சராசரியாக 9, 695 அடிகளை எடுத்துவைக்கிறார்களாம்.
7. குழந்தைகள் பொதுவாக 13 மாதங்களில் நடக்கத் தொடங்கும்.
8. 1970-களில் உலகில் 66 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு நடந்து சென்றனர். ஆனால் இப்போது 13 சதவீதம் குழந்தைகள்தான் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.
9. மனிதர்கள் சராசரியாக மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
10. மகாத்மா காந்தி, தினமும் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
----------------------------------------------------------------------------------------
ஜூலை 28
உருளைக்கிழங்கு
1. பெரு நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்கா இனத்தவர் முதன்முதலில் உருளைக்கிழங்கை பயிரிட்டதாக கூறப்படுகிறது.
2. 1536-ம் ஆண்டில் ஸ்பெயின் நாடு பெரு மீது படையெடுத்தது. பின்னர் அந்நாட்டில் இருந்து திரும்பிச் சென்ற ஸ்பானிஷ்  வீரர்கள் உருளைக்கிழங்கை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர்.
3. ஸ்பெயின் நாட்டில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு உருளைக்கிழங்கு பரவியுள்ளது.
4. 17-ம் நூற்றாண்டில் வர்த்தகத்துக்காக வந்த போர்ச்சுகீசியர்கள் மூலம் இந்தியாவுக்கு உருளைக்கிழங்கு அறிமுகமானது.
5. 1675-ம் ஆண்டில் சூரத்  மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் முதல் முறையாக உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது.
6. சோளம், கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கு அடுத்ததாக உருளைக்கிழங்கு உலகில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
7. உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யாவும், இந்தியாவும்  உள்ளன.
8. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளன.
9. மஞ்சள், சிவப்பு மற்றும் ஊதா நிறங்களிலும் உருளைக்கிழங்குகள் உள்ளன.
10. உருளைக்கிழங்கில் இருந்து ஓட்கா உள்ளிட்ட மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------
ஜூலை 29
ட்விட்டர்
1. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயகம் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது.
2. ஜாக் டோர்ஸே, பிஸ் ஸ்டோன், நோவா கிளாஸ், ஈவன் வில்லியம்ஸ் ஆகியோர் இணைந்து 2006-ம் ஆண்டில்  மார்ச் மாதத்தில் ட்விட்டர் வலைதளத்தை  தொடங்கியுள்ளனர்.
3. 2006-ம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் ட்விட்டர் செயல்பாட்டுக்கு வந்தது.
4. முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் ட்விட்டர் இயங்கி வந்தது.
5.  2020-ல் ட்விட்டர் நிறுவனத்தின் வருமானம் 3.72 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
 6. ட்விட்டரில் 1.3 பில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் தற்போது கணக்கு வைத்துள்ளனர்.
 7. உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் ட்விட்டரில் இணைந்துள்ளனர்.
8. ட்விட்டர் நிறுவனத்தில் 2008-ம் ஆண்டில் 8 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். 2020-ம் ஆண்டில் இது 5,500-ஆக அதிகரித்தது.
9. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளவர்களில் 28.4 சதவீதம் பேர் 35 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள்.
10. உலகத் தலைவர்களில் 83 சதவீதம் பேர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment